கணக்கு பிரிவு

வருடாந்த நிதிக்கூற்றில் அமைச்சு தலைப்பின் கீழ் அமைச்சர் காரியாலயம் மற்றும் அமைச்சுக் கரியாலயத்திற்காக கருத்திட்டம் இரண்டின் கீழ் சாதாரண நிர்வாகம் மற்றும் தாபன சேவை நடாத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் நிதி ஒழுங்குமுறைகளுக்கமைய செலவுகளை மேற்கொண்டு அதன் செயற்பணி விளைவுகளை வருடாந்த கணக்குகளினுள் கணக்காய்வாளருக்கு அறிக்கை அளிப்பதற்கான பொறுப்பு அமைச்சின் கணக்கு பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய வருடாந்த மதீப்பீட்டை ஒழுங்கமைத்தல், சம்பளம் வழங்கல் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள், கணக்கறிக்கைகளை பேணல், மாதாந்த கணக்கு மற்றும் வருடாந்த கணக்குகளை சமர்ப்பித்தல், கணக்காய்வு வினவல் தொடர்பான நடவடிக்கைகள், கணக்காய்வாளர் அறிக்கை மற்றும் கணக்கு ஆய்வு சபை நடவடிக்கைகள் கணக்கு பிரிவின் முக்கிய கடமையாகும்

கணக்காளர்

தலைமை கணக்காளர்
கணக்காளர்

கி 01

 1. அமைச்சிற்கு தொடர்பான கிடைக்கும் காசோலைகள் மற்றும் பணத்திற்கு பற்றுச்சீட்டை வழங்கல், வங்கியிலிடல்
 2. பணத்தை வங்கியிலிருந்து எடுத்து கொடுப்பனவுகளை மேற்கொண்டு அதன் பதிவுகளையும் மேற்கொள்ளல்
 3. வருடத்தின் சிறுகட்டு நிதியைப் பெற்று பராமரித்தல்
 4. மாகாண நிதி நியமம் 83ன் கீழ் சக்திகளை பகிரலை தயாரித்தல்
 5. அமைச்சு மற்றும் அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களுக்கு சம்பந்தமான அரச வங்கி கணக்கை ஆரம்பித்தல் மற்றும் அதற்கு பிரதம செயலாளரின் அனுமதியை பெறல்

கி 02

 1. அமைச்சின் நுகர்வு பொருள் மற்றும் மூலதன பொருள் களஞ்சியத்தை செயற்படுத்தல்
 2. அமைச்சின் நுகர்வு பொருள் மற்றும் மூலதன பொருள் தொடர்பான பதிவுகளை பராமரித்தல்
 3. அமைச்சின் தேவைக்கமைய நுகர்வு பொருள் மற்றும் மூலதன பொருள்களை கோருதல், பெறல் மற்றும் பகிரல்
 4. அச்சிடப்பட்ட படிவங்களை பெறல் மற்றும் பகிரல்
 5. அமைச்சின் மாகாண திட்டவட்டமான அபிவிருத்தி மானிய திட்டம், மாகாண அபிவிருத்தி மானிய திட்டம், உலகவங்கி உதவி அடிப்படை முறையிலான திட்டம், மாவட்ட அபிவிருத்தி திட்டத்திற்கு (மாகாண சபை உறுப்பினர்களின் யோசனை) போன்ற ஏற்பாடுகளை விடுவித்தல்.
 6. வாகனக் கொள்வனவுக்காக அரச செலவு முகாமைத்துவ குழுவில் அனுமதி பெறுவது தொடர்பான நடவடிக்கைகள்
 7. கி 04 உத்தியோகத்தரிடம் பெறப்படும் கொடுப்பனவு வவுச்சர்கள் முறையாக வைத்து, கணக்காய்வுக்கு சமர்ப்பித்தல், அதனை பாதுகாத்தல்
 8. சுகாதார சேவைத் திணைக்களம் (மே.மா.) மற்றும் ஆயுர்வேத திணைக்களம் (மே.மா.) பொது நடவடிக்கைகள்
 9. திணைக்களங்களின் மாதாந்த கணக்கு சுருக்க அறிக்கையை பெறல்

கி 03

 1. கணக்கு சுருக்க அறிக்கையை தயாரித்தல்
 2. வங்கி கணக்கிணக்கு கூற்றை தயாரித்தல்
 3. அரச உத்தியோகத்தர்களின் முற்கொடுப்பனவு கணக்கு தொடர்பான நடவடிக்கைகள்
 4. அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் மற்றும் வைத்தியசாலைளின் வங்கி கணக்கிணக்கு கூற்றைபெறல் மற்றும் பரிசோதித்தல்
 5. சுதந்திர தபால் தொடர்பான நடவடிக்கைகள்
 6. திணைக்களங்களின் கணக்காய்வு தொடர்பான நடவடிக்கைகள்

கி 04

 1. காசேடு பராமரித்தல் மற்றும் காசோலை எழுதல்
 2. அமைச்சு உத்தியோகத்தர்களின் மற்றும் அமைச்சர் காரியாலயத்தின் சம்பள பதிவேடு மற்றும் சம்பள வழங்கல் தயாரித்தல்
 3. கணக்காய்வு/ உள்ளக/ கணக்காய்வாளர் பதில்களை தயாரித்தல்
 4. மாகாண அரச கணக்கு சபை நடவடிக்கைகள் – அமைச்சு/ திணைக்களம்
 5. முற்பணக்கணக்கு/ பணம் செலுத்தும் கணக்கு தயாரித்தல்
 6. சுற்றறிக்கை கோப்பு பராமரித்தல்

கி 05

 1. வாக்கு பதிவு புத்தகத்தை பராமரித்தல்
 2. வருமானம் மற்றும் செலவு மதீப்பீட்டை தயாரித்தல்
 3. பொருள் பரிசோதனை குழுவை நியமித்தல் மற்றும் அகற்றுவது தொடர்பான நடவடிக்கைகள்
 4. முற்கொடுப்பனவு வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள்
 5. ஒதுக்கீட்டு கணக்கை தயாரித்தல்
 6. ஏற்பாடு மாற்றுவது தொடர்பான நடவடிக்கைகள்
 7. பிரதம செயலாளர் காரியாலயத்தின் கூற்றினோடு வாக்கு பதிவு புத்தகத்தை சமப்படுத்தல்

கி 06

 1. வவுச்சர்களை பரீட்சித்தல் மற்றும் புத்தகங்களில் பதிதல்
 2. அகற்றப்பட வேண்டிய வாகனங்களை அகற்றல் தொடர்பான குழுவை நியமித்தல் மற்றும் அகற்றுவது தொடர்பான நடவடிக்கைகள்
 3. கடந்த வருடங்களில் கொடுப்பனவுக்கு சமர்ப்பிக்கப்படாத வவுச்சர்களுக்கு கொடுப்பனவு செய்ய நி.நி 64ன் கீழ் அனுமதி பெறல்
 4. பிரதம செயலாளர் காரியாலயத்தின் கணக்கு சுருக்க அறிக்கையோடு அமைச்சின் மாதாந்த கணக்கு சுருக்க அறிக்கையை சமப்படுத்தல்
 5. அமைச்சின் நட்டம் மற்றும் இழப்பு தொடர்பான பதிவுகளை பராமரித்தல்

MPU

 1. கொள்வனவு தொடர்பான நடவடிக்கைகள் லலமதகதகர